கொரோனா விதி மீறல் - தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா விதி மீறலில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட கடைகள் மற்றும் தனியார் வங்கிக்கு மாநகராட்சி நல அலுவலர் விஜய்சந்திரன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் ரூபாய் 15000 அபராதம் விதித்தனர்.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொண்டும், வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.