வடநாட்டு சுற்றுலா பயணிகளுடன் காணும் பொங்கல்: தளவாய்சுந்தரம் பங்கேற்பு
குமரியில் வடநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடைபெற்ற காணும் பொங்கல் நிகக்ச்சியில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் பங்கேற்பு.;
தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி உள்ள நிலையில் உழவர் திருநாளான காணும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகத்துடனும், பாரம்பரிய முறையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் வடநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு தமிழர் திருநாளை தமிழர் பாரம்பரிய முறையான பொங்கல் வழிபாடு மூலம் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.