நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 356 வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2022-02-08 15:00 GMT

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற நிலையில் இன்று 20 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடைபெற்ற பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய விபரங்கள் மற்றும் சின்னம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News