குமரியில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
கன்னியாகுமரி மாவட்ட நிலதடுப்பு அபகரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய அலுவலங்களில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபிநபு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் மோப்பநாய் பிரிவு (Dog Squad) ஆகிய இடங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்ட அவர் காவல்துறையினருக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து உரிய அறிவுரை வழங்கினார்.