பொதுத்தேர்வு புறக்கணிப்பு - வீதியில் போராட்டம்: முடிவுதான் என்ன?

ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை இரண்டாவது நாளாக புறக்கணித்து வீதியில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-09-03 11:45 GMT

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வினாத்தாள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 98 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்து வருவதாகவும் தற்போதும் அதே முறை பின்பற்றப்படுவதால் அதிக அளவிலான மாணவர்கள் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றவில்லை என்றால் தாங்கள் தோல்வியை சந்திப்பது நிச்சயம் என கூறியும், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து பொதுதேர்வை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே இன்று இரண்டாவது நாளாக பொது தேர்வை புறக்கணித்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசை கண்டித்து ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News