குமரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி
குமரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோணம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் ஏராளமான கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்படி சிகிச்சை பெற்று வரும் கொரோன நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவர்களுக்கு அரோமா எண்ணெய் மூலமாக தினசரி நீராவி பிடித்தல் மற்றும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் மனக்கவலை வராமல் இருக்கவும் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் இந்த யோகா பயிற்சி பயனுள்ளதாக அமைவதாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர்.