நாகர்கோவிலில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய தற்காலிக கடைகள் அகற்றம்

நாகர்கோவிலில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.

Update: 2022-04-13 00:15 GMT

 நாகர்கோவிலில் கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதாக கிடைத்த புகார்கள் எழுந்தன. அப்பகுதிகளை, மேயர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது.

மேலும் மழைநீர் வடிகால் ஓடையில் காய்கறி கழிவுகளை போட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் நிறுத்தப்பட்டிருந்த, இரண்டு காய்கறி வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் உத்தரவிட்டார். அதன்படி அப்பகுதியில் நின்ற இரண்டு காய்கறி வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

Tags:    

Similar News