தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அபராதம் விதித்த அதிகாரிகள்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அபராதமும் விதித்தனர்.

Update: 2021-12-15 16:45 GMT
கடைகளில் ஆய்வு நடத்தும் அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி கோட்டார் பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகர் நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டன.

Tags:    

Similar News