வங்கி மேலாளருக்கு கொரோனா
நாகர்கோவில், வடிவீஸ்வரம் பகுதி பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின்படி மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.