இயற்கை உரம் விற்பனை : இலாபத்தை பகிர்ந்து அளித்த நாகர்கோவில் மாநகராட்சி

இயற்கை உரம் விற்பனை செய்ததில் கிடைத்த வருமானம் ரூ. 3 லட்சம் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

Update: 2021-08-06 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றம் செய்து ஒரு கிலோ ஒரு ரூபாய் என்ற விலையில் மாநகராட்சி சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  அதன்படி, வடசேரி நுண் உர செயலாக்க மையங்களில் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு கிடைக்கப்பெற்ற வருமானம்  ரூபாய் 3 லட்சம் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பணத்தை தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

Tags:    

Similar News