நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணி : எம்.எல்.எ ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணியினை எம்.எல்.எ காந்தி ஆய்வு செய்தார்.;

Update: 2022-01-23 16:00 GMT

நாகர்கோவில் மாநகராட்சி பகுதி சாலை பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ காந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னை நகர் சந்திப்பிலிருந்து குருசடி வரை செல்லும் சாலை மோசமாக காணப்பட்ட நிலையில் அந்த சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அந்தப் பகுதியில் சுமார் பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததை எடுத்து கூறிய பொதுமக்கள் தங்கள் புகாரை மனுவாக கொடுத்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

Tags:    

Similar News