நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை பாதுகாத்து, அனைத்து நிலை அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.