குப்பைகளில் இருந்து வருமானம்: அசத்தும் நாகர்கோவில் மாநகராட்சி
சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, நாகர்கோவில் மாநகராட்சி வருமானம் ஈட்டி வருகிறது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குப்பைகளில் உள்ள தென்னை ஓலைகளில் இருந்து மாநகராட்சி பணிகளுக்கு தேவையான வாரியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் தரம் பிரிக்கப்பட்டு சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய தினம் மாநகராட்சி வலம்புரிவிளை உரங்கிடங்கில் இருந்து தரம் பிரித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் திருநெல்வேலியில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.