வாக்குறுதி நிறைவேற்றாவிடில் பதவி விலகல்-வேட்பாளர் உறுதி

Update: 2021-03-27 04:30 GMT

தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு வருடத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார்.

நாம்தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜயராகவன் கோட்டார் பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில்,கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம், மக்கள் தங்கள் பகுதியின் குறைகளை உடனடியாக புகார் தெரிவிக்க நிரந்தர செல்போன் எண்ணும், பகிர வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி சாலைகள், சாக்கடைகள் சீரமைத்து, மரங்கள் நடப்பட்டு பசுமை மாநகராட்சியாக மாற்றப்படும்.

தென்னை, பனை, வாழை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி அமைக்கப்படும். லஞ்சம் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் அமைக்கப்படும். மேற்கூறிய வாக்குறுதிகளை பதவியேற்ற இரண்டு வருடத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News