மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2022-04-07 02:00 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு பின்னர் கடும் வெயிலானது பொது மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்த வெயிலின் காரணமாக பொதுமக்களும், வாகன ஒட்டிகளும், மாணவ மாணவிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, தற்போது பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இதனிடையே,  கடந்த சில நாட்களாக கடும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் விவசாயமும் விவசாயிகளும் பாதிப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் கனமழையால் விவசாயம் செழிப்பதோடு குடிநீர் தேவையும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News