கன்னியாகுமரியில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-03-28 17:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது, கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்,

இதனிடையே மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலான மழை பெய்தது, இந்த மழையின் காரணமாக வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News