வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு.

குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு.;

Update: 2021-07-12 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கி மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்யபட்டு வருகிறது. இதனிடையே இன்று 5 நபர்களுக்கு பிணை நிறைவேற்றபட்டுள்ளது, இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை நல்வழி படுத்த முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கெனவே 40 க்கும் மேற்பட்ட வழக்கமான குற்றவாளிகளுக்கு காவல்துறை சார்பில் பிணை நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News