பாதிரியார் ஜார்ஜ்பொன்னையாவை கைது செய்ய வேண்டும், இந்து மகாசபா கோரிக்கை
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இயக்கங்கள் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்துக்கள் குறித்தும் இந்து கோவில்கள் குறித்தும் கொச்சைப்படுத்தி பேசினார்.
மேலும் பாரத மாதா குறித்தும் பூமிதாய் குறித்தும் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்டீபன் மீதும் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த அகில பாரத இந்துமகா சபா தேசிய துணை தலைவர் பாலசுப்ரமணியம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.