குமரியில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Update: 2021-08-03 14:45 GMT

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தின விழாவை கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தவேண்டும். அப்பகுதியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் சீர்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் போது அவர்களை முறைப்படுத்தி அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும், சுகாதாரத் துறை மூலம் மருத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாடசாமி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News