ரெயிலில் 25 கிலோ குட்கா - கடத்தல் நபர் குறித்து போலீசார் விசாரணை
குமரி வந்த ரெயிலில் 25 கிலோ குட்காவை பறிமுதல் செறிக போலீசார் கடத்தல் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நாகர்கோவில் வந்த குறிப்பிட்ட ரயிலில் சோதனை மேற்கொண்ட போலீசார் ரயிலில் இருந்த 25 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில் நிலைய போலீசார், குட்காவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிரான ஆபரேஷன் நடந்து வரும் நிலையில் ரயிலில் குட்கா கடத்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.