குமரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடிய அரசு ஊழியர்கள்

குமரியில் வெள்ளை ஜரிகை சேலை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடிய அரசு ஊழியர்கள்.;

Update: 2021-08-19 12:00 GMT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

கேரளா மாநில மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையாக உள்ளது ஓணம் பண்டிகை. தங்கள் நாட்டை ஆண்ட மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் கொண்டாடப்படும் 10 நாட்களும் தங்களை காண வருவார் என்பது கேரளா மக்களின் நம்பிக்கை.

அதன் படி மன்னரை வரவேற்கும் வகையில் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் ஊஞ்சல் ஆடி ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் அறுசுவை உணவு சமைத்து ஓணம் கொண்டாடுவது வழக்கம்.

முந்தைய காலத்தில் கேரளாவுடன் இணைந்து இருந்த கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்.

அதன் படி பள்ளி கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், உள்ளிட்ட இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

வெள்ளை பட்டு சரிகை சேலை, உடையணிந்து வந்த பெண்கள் வண்ண வண்ண பூக்களால் கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர் மகிழ்ச்சியடைந்தனர். இதே போன்று பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆண் ஊழியர்களும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டாடினர்.

Tags:    

Similar News