மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்து நர்ஸ் பலி

Update: 2021-04-08 12:30 GMT

ஆசாரிபள்ளம் அருகே மோட்டார்பைக்கிலிருந்து தவறி விழுந்து நர்ஸ் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே அனந்தநகர் இந்திரா தெருவைச் சேர்ந்தவர் மீனா (48). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 6ஆம் தேதி வாக்களிப்பதற்காக தனது மகன் ராஜகோபாலனுடன் மோட்டார்பைக்கில் கொட்டாரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வாக்களித்து விட்டு மீண்டும் ஆசாரிபள்ளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

மீனா மோட்டார்பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நிலையில் சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் வரும் போது திடீரென தலை சுற்றுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ராஜகோபால் பைக்கை நிறுத்தி உள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை ஆசிரமம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மீனா உயிரிழந்தார்.  இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News