கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது - தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது என்று அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்தும், 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், வரும் 27ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கன்னியாகுமரியில் மக்கள் எதிர்பையும் மீறி சரக்கு பொட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு ரத்து செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை வைத்து பொய்யான தகவல்களை கூறி திமுக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த காலத்திலும் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் பலிக்காது எனவும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லியே தாங்கள் வாக்கு கேட்பதாகவும் தெரிவித்தார்.