வாக்களிக்க தயாராகும் புதிய வாக்காளர்கள்

Update: 2021-03-10 15:56 GMT

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள  பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் 18-வயது நிரம்பிய முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவிகளுக்கு 100% வாக்களிப்பதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும்  தேர்தல் அலுவலருமான அரவிந்த் கலந்து கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் யாராக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எனவே இதுவரை தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காதவர்கள்  உடனடியாக சேர்க்க வேண்டும் முதல் முறையாக வாக்களிக்கும் உணர்வு என்பது மிகவும் அருமையான ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் வீட்டில் உள்ள பெற்றோருக்கும் வாகளிப்பதன் அவசியம் குறித்து மாணவிகள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியருடன் ஏராளமான மாணவிகளும் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் போது மாணவிகள் ஒன்றிணைந்து கலந்துகொண்ட 100 சதவிகித வாக்கு குறித்த விழிப்புணர்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News