மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம்: நாகர்கோவில் மாநகராட்சி
மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மரம் நடும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.;
மரக்கன்றுகளை நட்ட மாநகராட்சி ஆணையர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம் என்ற விழிப்புணர்வு மூலம் பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்கு சொந்தமான அவிட்டம் திருநாள் மைதானத்தில் அமைய பெற்றுள்ள, ஆதரவற்றோர் தங்குமிடமான அபயகேந்திரம் அமைப்புடன் இணைத்து அதன் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையர் நட்டு வைத்தார்கள்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தன்னார்வ அமைப்புகளுடன் இணைத்து இதுவரை 400 க்கும் அதிகமாக மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வேப்பமூடு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பூங்கா பராமரிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.