நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!
நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள் மீது அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.;
நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு உத்தரவை மீறிய இரண்டு கடைகளுக்கு ரூபாய் 5000 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதோடு பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது