நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு சுற்றுலா தலங்களை மூடவும் பூங்காக்கள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட இடங்களை அடைக்கவும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடற்கரைகள், அருவிகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் அடைக்கப்பட்டன.அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு பூங்கா, வடசேரி பூங்கா காந்தி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் அடைக்கப்பட்டன.அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த பூங்காக்கள் அடக்கப்பட்டிருக்கும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.