நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 10 கோடியில் 24 சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 10 கோடி மதிப்பில், 24 சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.

Update: 2021-06-24 12:00 GMT

நாகர்கோவில் மாநகராட்சியில் 10 கோடியில் தார்சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 முக்கிய பிரதான சாலைகளை புதும்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் முதல் ஒழுகினசேரி சாலைகள் உள்ளிட்ட 24 சாலைகளில் தார் ரோடு போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருந்த நிலையில் சாலைகளை சீர் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் சாலைகளை சீர்செய்ய ஓப்பந்தகாரர்களுக்கு ஏலம் விட ஆணை பிரபித்தார்.

இதனை தொடர்ந்து 24 பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்பட்டு தார்சாலை போடும் பணி தொடங்கியது.

சுமார் 3 வருடங்களாக சாலைகள் சீர் செய்யப்படாததால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் புதிய சாலைகள் அமைக்கும் பணியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், 

Tags:    

Similar News