நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள் துவக்கம்
நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக உள் கட்டமைப்பு பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் களையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிட உள்கட்டமைப்பு பணியினை ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கட்டுமான பணிகள் முடிந்ததும் மாநகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.