தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன் உதாரணமாக திகழும் நாகர்கோவில் மாநகராட்சி.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன் உதாரணமாக திகழும் நாகர்கோவில் மாநகராட்சி.
கொரோனா இரண்டாம் அலை பரவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சம் அடைந்து அதன்படி பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகதின் சேவை காரணமாக பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நேரடியாக சென்று சேர்ந்தன. ஒட்டுமொத்த மாவட்டத்திலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி தடுப்பூசி போடும் சிறப்பு முகாமிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.
அதன்படி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி சிறப்பு மையங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ததோடு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மையங்களுக்கு கூட்டமாக இல்லாமல் தனித்தனி வட்டங்கள் அமைத்து பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ததோடு சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பையும் மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகள் பொது மக்கள் மனதில் நல்லெண்ணத்தையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.