வரி செலுத்த வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் - கடும் நடவடிக்கையை தடுக்க மாநகராட்சி அறிவுறுத்தல்.
வரும் 31 ஆம் தேதிக்குள் வரிசெலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் மாநகராட்சி அறிவுறுத்தல்;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பொதுமக்கள் 2021-2022ம் நிதியாண்டிற்கு நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் தொழில் வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை செலுத்துவதற்கு இம்மாதம் மார்ச் 31 கடைசி நாள் ஆகும்.
ஆனால், நாகர்கோவில் மாநகராட்சியில் இதுவரை குறைந்த அளவில் மட்டுமே வரி வசூல் நடைபெற்று உள்ளன.ஆகையால் இன்று முதல் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்கள் வரி செலுத்த எதுவாக நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் 5 சிறப்பு கவுண்டர்களும், வடசேரி பேருந்து நிலையம், வடிவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், இடலாக்குடி, மறவன்குடியிருப்பு, எறும்புகாடு, ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள வரிவசூல் மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
மேலும் அனைத்து மையங்களிலும் கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட் மூலமாகவும் பணம் செலுத்தலாம், மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆன் லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.இணையதளம் மூலமாக பணம் செலுத்துவதற்கு www.nagercoilcorporation.in என்ற இணையதள முகவரியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.