நாகர்கோவில் மாநகராட்சியில்ன் ரூ. 1 கோடியில் 8 பூங்காக்கள்

நாகர்கோவில் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் 8 பூங்காக்கள் அமைக்கும் திட்டம் தொடங்கியது.;

Update: 2022-03-11 00:15 GMT

பூமி பூஜையில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில்,  மூலதன மானியம் திட்ட நிதியின் கீழ்,  8 பூங்காக்கள் அமைக்க, ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி முதற் பணியாக நாகர்கோவில் மாநகராட்சி அவ்வை சண்முகம் சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற பூமி பூஜையில்,  மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News