நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சிறப்பு பரிசோதனை முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் காய்ச்சல், சளி சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

Update: 2021-06-18 14:15 GMT

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் காய்ச்சல், சளி சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறுகட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், கோட்டார் உட்பட 5 இடங்களில் மாநகராட்சி சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.  கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள தயங்கும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு முகாம் மூலம் தங்களை பரிசோதித்து கொண்டனர்.

இதுபோன்ற முகாம்கள் தங்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாகவும் பரிசோதனை செய்துகொள்ள மக்கள் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News