நாகர்கோவில்: மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள்
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. மாநகராட்சி அலுவலக பணி, தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு பணிகள் என கணிசமான பணி சுமையை கொண்டு செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி முதல் நாளாக இன்றைய தினம் இந்துக்கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டியினை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்கள். மேலும் வரும் சனிக்கிழமை 05/03/2022 ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஆண் மற்றும் பெண் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.