நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து தற்பொழுது ஜல்லிகள் போட்டு சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லி மற்றும் மணலில் இருந்து அதிகளவு புழுதி கிளம்புகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் சாலை பணியை, உடனடியாக மேற்கொண்டு தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.