நோய் தடுப்பு பணி: கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை

குமரியில், நோய் தடுப்பு பணி குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.;

Update: 2022-01-12 10:30 GMT

நாகர்கோவிலில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு,  துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கூட்டரங்கில்,  கொரோனா மூன்றாவது அலை தடுப்பு பணி குறித்து, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது, இதுவரை  எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News