25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளி
குமரியில் 25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள நாவல் மரத்தில் சுமார் இருபத்தைந்து அடி உயரமான மரக்கிளையில் வட இந்தியாவை சேர்ந்த பெண் மனநோயாளி ஒருவர் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார்.
சாதாரண நபரால் எளிதில் ஏறி செல்ல முடியாத வகையில் காணப்படும் அந்த மரக்கிளை மீது ஒரு பெண்மணி எந்த சலனமும் இன்றி தூங்கிக் கொண்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்மணி கீழே விழுந்து விடுவாரோ என அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கவலை கொண்ட நிலையில், அதனை பொருட்படுத்தாத மனநோயாளி தூக்கத்தில் இருந்து எழும்பி பரிகாசமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். இந்த காட்சி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது,
இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ரயில்வே போலீசார் பெண்மணியை கீழே இறங்கச் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
சமீப காலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வட இந்திய மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ரயில் பயணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளது.