நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
மேல சூரங்குடி பகுதிகளில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பகுதியான வட்டகரை மற்றும் மேல சூரங்குடி பகுதிகளில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி மெகா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.