நாகர்கோவிலில் வளர்ச்சிப்பணிகள்: மாநகராட்சி மேயர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.;
இருளப்பபுரம் பகுதியில், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர பூங்காக்கள் அமைப்பதற்காக இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சரலூர் மீன் சந்தை பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மேயர் நாகர்கோவில் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சியாக அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.