நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் மகேஷ் ஆய்வு

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரும் பணி தீவிரமாகி உள்ள நிலையில் அதனை மேயர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-18 02:16 GMT

நாகர்கோவிலில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் ஓடை அடைபட்டு காணப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகர் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி ஆறு போல் காட்சியளித்த நிலையில் அதனை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகரில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் டெரிக் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அப்போது பணிகளை துரிதப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News