நாகர்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு: மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-04-20 08:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார துறை அமைச்சரிடம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த கோரிக்கையை முன் வைத்தார். இதனை ஏற்று கொண்ட அமைச்சர் உடனடியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பெருவிளை கிறிஸ்டோபர் காலனி பகுதியில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரைவில் இடம் உறுதி செய்யப்பட்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News