கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, குமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமண நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் திருமண மண்டப உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கூறும் போது திருமண மண்டபத்திற்குள் சமூக இடைவெளியிடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும், மண்டபத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பேசினார். மேலும் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத மண்டபங்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் பேசினார். மேலும் மண்டப உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.