குட்டி காமராஜர் எம்.ஆர் காந்தி வேட்புமனு தாக்கல்

குமரியின் குட்டி காமராஜர் என்றழைக்கப்படும் பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-20 03:23 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரை சேர்ந்தவர் எம்.ஆர் காந்தி. சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் திருமணம் செய்யாமல் தேச பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முதல் தூணாக திகழ்ந்த இவர் காமராஜரை போன்று ஆளுயர சட்டை வேட்டி அணிந்து சர்வ சாதாரணமாக வலம் வருவார், இவரை குமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களும் குமரியின் குட்டி காமராஜர் என்று அழைப்பார்கள்.

எளிமையின் சிகரமாக திகழும் இவர் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தட்டிக்கேட்கும் முதல் மனிதனாகவும் இருப்பார், இதனிடையே அதிமுக கூட்டணியில் நாகர்கோவில் தொகுதி பாஜக வேட்பாளராக எம்.ஆர் காந்தியை அறிவித்தது பாரதீய ஜனதா கட்சி.

இந்நிலையில் இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாகர்கோவிலில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த எம் ஆர் காந்தி மக்கள் தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் நீர் ஆதாரத்தை பெருக்கவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உழைப்பேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News