குட்டி குருவாயூரில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குமரியின் குட்டி குருவாயூரில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-15 12:00 GMT

கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டம். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குட்டி குருவாயூர் என்றழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் கேரள மாநிலம் குருவாயூரில் இருக்கும் சுவாமி கிருஷ்ணரின் விக்கிரகம் போன்று இங்கும் சுவாமி சிலை அமைந்துள்ளதால் இது குட்டி குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. அதனை பக்தர்களும் பொதுமக்களும் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர், கோயிலின் சுற்று பாதையில் தேர்பவனியை பக்தர்கள் இழத்து வந்தனர், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News