குமரியில் காவடி திருவிழா - காவடிகளுடன் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை
குமரியில் காவடி திருவிழாவை தொடர்ந்து காவடிகளுடன் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை சென்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நாளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படிகன்னியாகுமரி மாவட்டத்தில் காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகர்கோவில், இரணியல், குளச்சல், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும் பலவிதமான காவடிகள் ஏந்தியும் ஊர்வலமாக திருச்செந்தூருக்கு பாதயாதிரையாக புறப்பட்டனர். சுமார் 600 க்கும் மேற்பட்ட காவடிகள் வித விதமான அலங்காரத்துடன் ஆடி ஆடி சென்ற காட்சியை பல்லாயிர கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.