அத்தியாவசிய பொருட்கள் விற்பனை - மக்களை கவர்ந்த மாநகராட்சி

முழு ஊராடங்கில் மக்களை தேடி சென்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மாநகராட்சியின் செயல் மக்களை கவர்ந்தது.

Update: 2021-05-30 14:04 GMT

முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி போன்ற பொருட்களைவீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்தது.

அதன் படி நாகர்கோவில் மாநகர பகுதியில் இதனை செயல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் படி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக பகுதியான கோட்டார் பஜார் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கோட்டார் பஜார் பகுதியில் சில்லரை வணிகத்திற்கு தடை விதித்து மொத்த வியாபாரம் மட்டுமே மேற்கொள்ளவும் அதன்படி சில்லறை வியாபாரிகள் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து மாநகர் முழுவதும் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வார்டுகளிலும் பொருட்கள் கிடைக்கிறதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனித்தனியே தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் வருவாய் உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது, ஏற்கனவே காய்கறி, மீன், இறைச்சி போன்றவை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மளிகை பொருட்களும் எளிதில் கிடைக்கும் என்ற நிலையில் மாநகராட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

Tags:    

Similar News