குமரியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டி: ஏராளமான சிறுவர், சிறுமிகள் பங்கேற்பு
குமரியில் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய சிறுவர் சிறுமிகள்.
மன அமைதிக்கு மருந்தாக அமையும் பாடலை பாடும் திறமை கொண்ட பல்வேறு நபர்களுக்கு அந்த திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலை உள்ளது.
தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட போட்டிகளிலும் வசதியின்மை போன்ற காரணங்களால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தை சேர்ந்த பாடல் திறமை படைத்தவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் பாடல் திறமை இருந்தும் வாய்ப்புகள் அமையாததால் அதனை வெளிப்படுத்த முடியாமல் இருந்த சிறுவர்களுக்கான பாடல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டி நடத்தப்பட்டது.
சினி இசை கலைஞர்களின் பின்னணி இசையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுகளும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுகளும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.