நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

அரசு உத்தரவுப்படி பள்ளிகள் செப்டம்பர்1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்.

Update: 2021-08-30 11:30 GMT

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்வி நிலையங்களை திறக்க வழிமுறைகளை வெளியிட்டது.

தமிழக அரசின் உத்தரவின் படி வருகின்ற 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் செயல்பட உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

அதன் படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செடிகள் அகற்றப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி இந்த பணிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News