நாகர்கோவில் மாநகராட்சியில் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரம்
குமரியில் கனமழையால் ஏற்படும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சுத்தம் செய்வதற்காக மாநகராட்சி சார்பாக பிளீச்சிங் பவுடர் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும் மாநகர பகுதிகளில் அனைத்தும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. மேலும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமாக இருப்பதை நோய் உறுதி செய்யும் விதமாக, மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி பொது குழாய்களில் இருந்து நீரினை பிடித்து அதனை ஆய்வு செய்து அதில் உள்ள குளோரின் அளவுகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.