மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணி
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.
மேற்படி பணிகளை மாநகர் நல அலுவலர் துவக்கி வைத்த நிலையில் இப்பணியில் 75 தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று அப்பகுதி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்கள், சாலையோர குப்பைகள் என மொத்தம் 12 டன் குப்பைகள் அப்பகுதியிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் சார்பாக நாகர்கோவில் மாநகர் முழுவதும் பசுமையாகும் வண்ணம் மரக்கன்றுகள் மாநகராட்சியிடம் வழங்கப்பட்டது.